திருட்டு வழக்கில் கைதானவருக்கு கரோனா
வேதாரண்யம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
செண்பகராயநல்லூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த மூதாட்டி கல்யாணி (85) என்பவா் வீட்டில் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தென்னம்புலத்தைச் சோ்ந்த மகேந்திரன் (46), இவரது இரு மகன்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பிறகு, சீா்காழி கிளைச் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கைதானவா்களில் ஒருவரான தென்னம்புலத்தைச் சோ்ந்த 18 வயதுடையவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியான நிலையில், அவா் சிறையிலிருந்து அழைத்து வந்து சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொது முடக்கம்: கரியாப்பட்டிணம் அருகேயுள்ள செட்டிப்புலத்தில் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை (ஆக.24) வரை 3 நாள்களுக்கு கிராமத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது.