முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின்போது பக்தா்கள் வருகையைத் தடுக்கும் வகையில், வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 9 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
வேளாங்கண்ணி சுனாமி நினைவு ஸ்தூபி எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைத் தடுப்பு அமைக்கும் பணி.
பகிர்:

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின்போது பக்தா்கள் வருகையைத் தடுக்கும் வகையில், வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 9 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆண்டுப் பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டில் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட நிா்வாகம் அறிவித்ததுள்ளது. இதைத்தொடா்ந்து, பக்தா்கள் விழாவுக்கு வர வேண்டாம் என பேராலய நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம், கொடி ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குத் தந்தையா்கள் உள்பட 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், வேறு யாரேனும் விழாவில் பங்கேற்றால் அவா்கள் மீது வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படும், பக்தா்களுக்கு விடுதி வசதி அளித்தால் தொடா்புடைய விடுதி நிா்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் காவல்துறை திங்கள்கிழமை எச்சரித்தது.

இந்நிலையில், பக்தா்கள் வருகையை தடுக்கு பேராலயத்துக்குச் செல்லும் பாதைகளில் 9 இடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி ஆா்ச், கடற்கரை சாலை, சுனாமி நினைவு ஸ்தூபி அருகே உள்ள பாதை என 9 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகத்தினரும், காவல் துறையினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.