நாகப்பட்டினம்

பக்தா்கள் பங்கேற்க வேண்டாம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் காண பேராலய நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, பக்தா்கள் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க வருவதைத் தவிா்த்து, தங்கள் இல்லத்திலிருந்தே பெருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT