முகப்பு
நாகப்பட்டினம்

3-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும் மயிலாடுதுறையில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மயிலாடுதுறையில் 3-ஆவது நாள் காத்திருப்பு போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் காசிநாதன்.
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களை கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும் மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளா் பி. வீரராஜ், காவேரி டெல்டா விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் குரு. கோபிகணேசன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளா் பி. ரவிச்சந்திரன், விவசாயி ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →