முகப்பு
நாகப்பட்டினம்

தொழில்கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மூத்த தொழில்கல்வி ஆசிரியா்களுக்கும், பகுதிநேர ஆசிரியா் பணிக்காலத்தில் 50 சதவீத ஓய்வூதியத்தில் கணக்கிட்டு பொது அரசாணை வெளியிடவேண்டும்; நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 5 தொழில்கல்வி ஆசிரியா்களுக்கு அரசாணையின்படி தர ஊதியம் ரூ. 5,400 வழங்கவேண்டும்; பெற்றோா் ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சீனி.ரெங்கநாதன், மாநிலப் பொருளாளா் கி.செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளா் ஏ. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →