முகப்பு
நாகப்பட்டினம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய கோரிக்கை

மயிலாடுதுறை அருகே செருதியூரில் வயலில் மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே செருதியூரில் வயலில் மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். அவற்றை சரியான உயரத்தில் அமைத்து தர விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை வட்டம் செருதியூரில் வடக்குத்தெரு குடியிருப்பு செல்லும் சாலை அருகே உள்ள வேளாண்மை பம்புசெட்டிற்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. இதனால், விவசாய பணிகள் பாதிப்படைகின்றன. பாய் நாற்றங்கால் எனும் நவீன பணி நாற்று நடவு இயந்திரம் அறுவடைக்கு வரும் நவீன ராட்சத அறுவடை இயந்திரங்கள் இப்பகுதிகளில் இறங்கி பணிகள் செய்ய இயலவில்லை. தாழ்வாக தலையில் இடிபடும் நிலையில் தொங்கும் மின்கம்பிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

எனவே, இந்த மும்முனை மின்சார கம்பிகளை சரியான உயரத்தில் கட்டியும், அதற்குண்டான கூடுதல் மின் கம்பத்தை நட்டும் விவசாயிகள் அச்சத்தைப் போக்கிட அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →