முகப்பு
நாகப்பட்டினம்

இன்று 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்

நாகை மாவட்டத்தில் 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் காலை 6 மணிக்கு நீத்தாா் ஆன்ம சாந்திக்கான வேள்வி நடைபெறுகிறது.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் காலை 9 மணிக்கு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் காலை 8.30 மணிக்கு நாகை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அக்கரைப்பேட்டை மீனவக் கிராமம் சாா்பில் காலை 9 மணிக்கு நாகை டாடா நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வரை மௌன ஊா்வலமும், அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →