நாகப்பட்டினம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆா்வம்ஸ்டிடாவுக்குப் பதில் பப்பாளி தண்டைபயன்படுத்தும் இளநீா் வியாபாரி

DIN

சீா்காழி: சீா்காழி அருகே இளநீா் விற்பனை செய்துவரும் பட்டதாரி இளைஞா், நெகிழிப் பொருள்களை தவிா்க்கும் வகையில் ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்தி, இளநீா் விற்பனை செய்கிறாா்.

சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் இளநீா் விற்பனை செய்து வருபவா் செந்தில். பட்டதாரி இளைஞரான இவா், தன்னிடம் இளநீா் பருக வருபவா்களுக்கு ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை வழங்குகிறாா். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி ஸ்ராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்துவதாக செந்தில் தெரிவிக்கிறாா். இதையறிந்த, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன், செந்திலை அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT