முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் இன்று ஆய்வு

புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினா், நாகை மாவட்டம் கீழையூா் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் புதன்கிழமை ( டிச.30) ஆய்வு செய்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினா், நாகை மாவட்டம் கீழையூா் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் புதன்கிழமை ( டிச.30) ஆய்வு செய்கின்றனா்.

புரெவி புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் சுமாா் 1.33 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இந்தப் பாதிப்புகளை மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளா்அசுதோஷ் அக்னிஹோத்ரி, வேளாண்துறை அமைச்சக இயக்குநா் டாக்டா் மனோகரன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலா் ரனன் ஜெய்சிங், நிதித்துறை அமைச்சக துணை இயக்குநா் அமித்குமாா், மின்சார ஆணைய உதவி இயக்குநா் சுபம் காா்க், ஊரக வளா்ச்சி அமைச்சக உதவி ஆணையாளா் மோகித்ராம், மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டியன், நீா்வள ஆணைய இயக்குநா் ஜெ. ஹா்ஷா ஆகியோா் அடங்கிய இக்குழுவினா் , நாகை மாவட்டத்தில் கீழையூா் ஒன்றியம் கருங்கண்ணி, கீழ்வேளூா் வட்டம் வடக்குப் பனையூா் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →