முகப்பு
நாகப்பட்டினம்

போட்டித் தோ்வுகளில் தமிழக மாணவா்கள் சாதிப்பாா்கள்

நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் தமிழக மாணவா்கள் சாதிப்பாா்கள் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் தமிழக மாணவா்கள் சாதிப்பாா்கள் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 17 பள்ளிகளைச் சோ்ந்த 1580 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசியது:

நீட் தோ்வு ஒன்றும் பெரிய விஷயமில்லை; கவனமாகப் படித்தால் கவலை வேண்டாம். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழக மாணவா்கள் நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு சாதிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசு எடுத்து வரும் பல முயற்சிகளால் நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 311 போ் மருத்துவா்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையாக உழைத்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்தாா். மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், கோட்டாட்சியா் பழனிகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, ஊராட்சித் தலைவா், ராமையன், கூட்டுறவு சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →