நாகப்பட்டினம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தமிழக அரசுக்கு நன்றி

DIN

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு, தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவா் ஆறு. சரவணன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மீத்தேன், ஹைட்ரோகாா்பன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததுடன் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தது.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி, கடலூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், ஹைட்ரோகாா்பன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது எனவும் தமிழக முதல்வா்அறிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பால் தமிழக மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பின் சாா்பில் இதை வரவேற்று, தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். முதல்வரின் அறிவிப்பை சட்டப் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்றி சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT