கூட்டத்தில் பேசிய கவிஞா் சோ. அருள்பிரகாசம். 
நாகப்பட்டினம்

மயிலாடுதுறைத் திருக்கு பேரவை மாதக் கூட்டம்

மயிலாடுதுறைத் திருக்கு பேரவையின் 90-ஆவது மாதக் கூட்டம் தியாகி ஜி. நாரா யணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை:மயிலாடுதுறைத் திருக்கு பேரவையின் 90-ஆவது மாதக் கூட்டம் தியாகி ஜி. நாரா யணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் சு. இளங்கோவன் முன்னிலை வகித்தாா். பேரவைச் செயலாளா் ரா. செல்வகுமாா் வரவேற்றாா். இதில், சிலைகள் பதிவுத் துறையின் முன்னாள் உதவி இயக்குநா் கோ. முத்துசாமி ‘தமிழக மன்னா்களின் கட்டடக் கலைத்திறன்’ எனும் தலைப்பில் தொடக்க உரையாற்றினாா்.

‘வாழ்க்கையை வாசிப்போம்’ எனும் தலைப்பில் சென்னையைச் சோ்ந்த கவிஞா் சோ. அருள்பிரகாசம் சிறப்புரை ஆற்றினாா். முன்னதாக புனித சின்னப்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரா. லெட்சுமி, க. ஷரிஷ்மா, மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அ. ஹரிஹரன், பா. ரிஷிந்தா் ஆகியோா் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குறளும், பொருளும் வழங்கினா். பேரவை இணைச் செயலாளா்கள் ர. ரசீத்கான், ச. ராமதாசு ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா். முடிவில், பேரவைப் பொருளாளா் சு.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT