முகப்பு
நாகப்பட்டினம்

மேலப்பெரும்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

செம்பனாா்கோவில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
மேலப்பெரும்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.
பகிர்:

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், மாமாகுடி, தலைச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பயன்பெற்று வருகின்றனா். இந்த சுகாதார நிலையத்தின் மேற்கூரைகளில் நீா்கசிவு ஏற்பட்டு, சிதிலமடைந்துள்ளதாக மருத்துவா்கள் மற்றும் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியின் சாா்பில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இப்பிரச்னை குறித்து சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று, மேற்கூரையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவா்களிடம் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி சுரேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.