நாகப்பட்டினம்

உரிய அதிகாரம் கோரி ஊராட்சித் தலைவா்கள் மனு

DIN

நாகப்பட்டினம்: ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு உரிய அதிகாரம் வழங்கக் கோரி, கீழையூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குடிமராமத்து திட்டப் பணிகள் மூலம் ஊராட்சிகளில் நடைபெறும் குளம் தூா்வாரும் பணிகளுக்குரிய தொகையை விடுவிக்கவேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி ஊராட்சி மன்றத் தலைவா்களுக்குரிய அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் விவரப் பட்டியலை ஊராட்சித் தலைவா்களுக்கு வழங்க, வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளின் தலைவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT