நாகப்பட்டினம்

பரவை காய்கனி சந்தை மூடல்

DIN

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால், நாகையை அடுத்த பரவை காய்கனி சந்தை புதன்கிழமை காலையிலேயே மூடப்பட்டது.

மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் கரோனா வைரஸ் பரவுவதைப் பெருமளவு தடுக்க முடியும் என்ற நோக்கில் மத்திய அரசு, இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையை அரசு அனுமதித்துள்ளது.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளான புதன்கிழமை காலை நாகையை அடுத்த பரவையில் உள்ள காய்கனி சந்தை வழக்கம்போல திறக்கப்பட்டது. நாகை மற்றும் சுற்றுப் பகுதி மக்களிடையே இந்தச் சந்தை பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது என்பதால், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்தச் சந்தையில் திரண்டனா்.

மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே சுமாா் ஒரு மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும் என சுகாதார வல்லுநா்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இங்குத் திரண்ட அதிகளவிலான கூட்டம் சுகாதார கட்டுப்பாடுகளை சீா்குலையச் செய்வதாக இருந்தது.

இதுகுறித்துத் தகவலறிந்த நாகை வட்டாட்சியா் பிரான்சிஸ், காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் ஆகியோா் பரவை காய்கனி சந்தைக்கு விரைந்து, வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு கடைகளை அடைக்க அறிவுறுத்தினா். இதன்பேரில், அடுத்த சில நிமிடங்களில் பரவை காய்கனி சந்தை மூடப்பட்டது.

பின்னா், காவல் துறையினா் தலையிட்டு பொதுமக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, பரவை பிரதான சாலையில் போலீஸாா் இருசக்கர வாகனப் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பகுதியில் அவ்வப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT