சீர்காழியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி
சீர்காழி சர்க்கான் தெருவை சேர்ந்த 45 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி சர்க்கான் தெருவை சேர்ந்த 45 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அடையாறில் சிகிச்சைக்கு சென்று இரு தினங்கள் முன்பு வீடு திரும்பியவர். இவருக்கு சென்னையில் பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தொற்று உறுதி செய்யப்பட்டு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த நபரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் கொண்டு சென்றனர்.