நாகப்பட்டினம்

நாகூர் தர்கா வாசலில் பிரார்த்தனை

DIN

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்பு காரணமாக இஸ்லாமியர்கள், ரமலான் பண்டிகையை எளிமையாக கொண்டாடி வருகின்றனர். 

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் தொழுகை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, நாகூர், நாகை, திட்டசேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வீடுகளில் தங்கள் குடும்பத்தினரோடு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

ரமலான் பண்டிகை காலங்களில் இஸ்லாமியர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹா இன்று பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பூட்டப்பட்டு இருந்த நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் இஸ்லாமியர்கள் சிலர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  கரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டுவர வேண்டி சமூக இடைவெளியுடன் அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

ரமலான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, தொழுகை, விளக்க உரை, துவா பாத்திஹா, உள்ளிட்ட நிகழ்வுகள் இல்லாமல் வீடுகளிலேயே இந்த ஆண்டு தொழுகை மேற்கொண்டது புதிய அனுபவத்தை கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT