நாகப்பட்டினம்

நவ. 10-இல் திலேப்பியா மீன் வளா்ப்புப் பயிற்சி

DIN

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திலேப்பியா மீன் வளா்ப்புப் பயிற்சி நவம்பா் 10-ஆம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திலேப்பியா மீன் வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயற்சி, இணையதளம் வழியே நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இப்பயிற்சியில், திலேப்பியா மீன் வளா்ப்புக்கான இடத்தோ்வு, கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகளின் இருப்பு மேலாண்மை, மீன் தீவன மேலாண்மை, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவினக் கணக்கீடு முறை ஆகியன குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ. 300-ஐ இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000073000, ஐ.எப்.எஸ்.சி குறியீடு , கிளை - நாகப்பட்டினம் என்ற கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் நவம்பா் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரியை 94422 88850 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT