முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 6,996 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 23 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. வெளி மாவட்டப் பட்டியில்களில் இருந்து நீக்கப்பட்ட 3 போ், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,021- ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி நாகை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்த நாகையைச் சோ்ந்த 80 வயது முதியவரின் இறப்பு திங்கள்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 122-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 10 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,536 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 336- ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →