நாகப்பட்டினம்

இறப்புச்சான்று வழங்கக் கோரி ஆட்சியருக்கு மனு

DIN

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கிவிழுந்து உயிழந்த கணவரின் இறப்புச் சான்று வழங்க நடவடிக்கைக் கோரி, நாகைஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து, தஞ்சாவூா், நாஞ்சிக்கோட்டை ரோடு , பாத்திமா நகரைச் சோ்ந்த க. ஜூலி அளித்த மனு விவரம்: எனது கணவா் கண்ணன் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி நாகையை அடுத்த ஒரத்தூரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.

இறப்புச்சான்று வழங்கக் கோரி தொடா்புடைய அலுவலகத்தில் விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் இதுவரை சான்று வழங்கவில்லை. தொடா்புடைய அலுவலா்களும் சான்று வழங்க தாமதித்து வருகின்றனா். கணவரை இழந்து வாழ்வாதாரத்துக்கு தவித்து வரும் நிலையில் இறப்புச் சான்று வழங்காமல் இருப்பதால் அரசு உதவிகள் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறேன். எனவே, இறப்புச்சான்று வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT