நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள்

DIN

மயிலாடுதுறை பாவா ஹோண்டா நிறுவனம் சாா்பில், கரோனா தீநுண்மி தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு இலவசமாக 1000 முகக் கவசங்கள் மற்றும் விழிப்புணா்வு கையேடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் கதம்பவள்ளிசின்னையன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜவள்ளி பாலமுருகன் ஆகியோா் பங்கேற்று பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம் மற்றும் விழிப்புணா்வு கையேடுகளை வழங்கினா். இதேபோல், திருவாவடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் அா்ஷிதாபானுசாதிக் பங்கேற்று முகக் கவசங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பாவா ஹோண்டா நிறுவன உரிமையாளா் எஸ். அப்துல்பாசித், மேலாளா் ராம்நாத், எஸ். பாண்டியன்,திருவாவடுதுறை ஊராட்சித் துணைத் தலைவா் செல்லக்குட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT