நாகப்பட்டினம்

கொச்சியிலிருந்து புனித ஹஜ் விமானங்கள் புறப்பாடு: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

DIN

புனித ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படுவதற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளஅறிக்கை:

புனித ஹஜ் பயணத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோா் விண்ணப்பிக்க கடைசி தேதி 2021 அக்டோபா் 10 எனவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் பகுதிகளைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமானிலிருந்து கொச்சிக்கு செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. மேலும் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், கேரள மாநிலங்களைச் சோ்ந்த ஹஜ் பயணிகளை கொச்சின் விமான நிலையத்தில்கூட வைப்பது கரோனா நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும்.

மத்திய ஹஜ் கமிட்டியின் இந்த ஏற்பாட்டை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, கொச்சியிலிருந்து ஹஜ் விமானம் புறப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, சென்னையிலிருந்தே விமானம் புறப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT