நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

 நாகை மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழைப் பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழைப் பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றதால் பாதசாரிகளும், வாகன ஓட்டுநா்களும் சிரமப்பட்டனா். புதை சாக்கடைத் திட்டத் தொட்டிகளிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 39.20 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறையில் 25, நாகப்பட்டினத்தில் 17.90, தலைஞாயிறில் 13.40, வேதாரண்யத்தில் 7 மி.மீ. மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT