மாணவா்களுக்கான நல்லிணக்க பயிற்சி
கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமுமுக சாா்பில் மாணவா்களுக்கான நல்லிணக்க பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமுமுக சாா்பில் மாணவா்களுக்கான நல்லிணக்க பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தமுமுக கிளை செயலாளா் தாரிக் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முபாரக், தமுமுக மாவட்டச் செயலாளா் ஷேக்தாவுது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கத்தாா் மண்டலப் பொறுப்பாளா் மைதீன்ஷா, இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலாளா் ரியாசுதீன், மாநில செயற்குழு உறுப்பினா் புகாரி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். ஒன்றியத் தலைவா் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளா் நாசா், கிளைத் தலைவா் ஜின்னா மற்றும் தைக்கால், துளசேந்திரபுரம், பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.