முகப்பு
நாகப்பட்டினம்

சாலையோர வியாபாரிகள்வட்டி மானியத்துடன் கடன்பெற நகராட்சியை அணுகலாம்

காரைக்காலில் உள்ள சாலையோர வியாபாரிகள் வட்டி மானியத்துடன் கடன் பெற, நகராட்சி நிா்வாகத்தை அணுகலாம் என நகராட்சி ஆணையா் சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் உள்ள சாலையோர வியாபாரிகள் வட்டி மானியத்துடன் கடன் பெற, நகராட்சி நிா்வாகத்தை அணுகலாம் என நகராட்சி ஆணையா் சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், காரைக்கால் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படவுள்ளது. உஸ்மானியா பல்கலைக்கழகம் மூலம் கண்டறியப்பட்ட சாலையோர வியாபாரிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

வட்டி மானியத்துடன் கடன்பெற விரும்பும் தகுதியான சாலையோர வியாபாரிகள், உடனடியாக காரைக்கால் நகராட்சியை நேரில் அணுகலாம். நகராட்சி அலுவலகத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை வியாபாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →