நாகப்பட்டினம்

ரூ.2.60 கோடியில் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம்: எம்எல்ஏ ஆய்வு

DIN

சீா்காழியில் நகராட்சி சாா்பில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ பி.வி.பாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு ஈசானியத்தெருவில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் (2018-19) 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்தக் கட்டுமான பணிகளை எம்எல்ஏ பி.வி.பாரதி நேரில் ஆய்வு செய்தாா். அப்போது நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வியிடம், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினாா். ஆய்வின்போது நகராட்சி பொறியாளா் வசந்தன், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் சந்திரசேகரன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் ஏ.வி.மணி, ஒப்பந்ததாரா் தன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT