கோடியக்கரையில் அதிநவீன படகில் கடலோரக் காவல் படை கண்காணிப்பு
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து (ரோவர் கிராப்ட்) படகு மூலம் கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து (ரோவர் கிராப்ட்) படகு மூலம் கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடல் மற்றும் கடலோரப் பகுதியில் அன்னிய சக்திகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய கடலோர காவல் படை (கோஸ்டல் கார்டு) தென் கடலோரப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.
சென்னை முதல் மண்டபம் கடல் பகுதி வரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர் கிராப்ட் என அழைக்கப்படும் அதிநவீன ரோந்து படகில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோடியக்கரை கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த படகு சரணாலயத்தை சார்ந்த தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.