முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல, காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக்கூடிய மற்றும் மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதற்கான முன்னறிவிப்பாக நாகை மற்றும் காரைக்காலில் இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இருப்பினும், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் சனிக்கிழமை பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →