வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வேதாரண்யம் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
வேதாரண்யம் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தொகுதிக்குள்பட்ட செம்போடை வெள்ளப்பள்ளம், தலைஞாயிறு, மணக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரித்தாா். அவருடன், திமுக ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் சிவகுரு. பாண்டியன்(சிபிஐ), வி. அம்பிகாபதி (சிபிஐஎம்), சுமா. செல்வராசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.