நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

வேளாங்கண்ணியில் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியான வேளாங்கண்ணியில் கபரசுரக் குடிநீா் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பத்மநாபன் தலைமையில், மருத்துவப் பணியாளா்கள் அஜீதா, தேன்மொழி ஆகியோா் வேளாங்கண்ணி பேராலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி, கரோனா தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உரிய வகையில் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT