முகப்பு
நாகப்பட்டினம்

தோப்புத்துறையில் புதிய பள்ளிவாசல் திறப்பு

வேதாரண்யம் தோப்புத்துறையில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜிதுல் ஆரிஃபின் இறை இல்ல திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

வேதாரண்யம் தோப்புத்துறையில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜிதுல் ஆரிஃபின் இறை இல்ல திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவா் எம்.ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். கட்டடப் பணிக்குழு துணைத் தலைவா் எஸ்.என்.எம். ஜெய்னுதீன், செயலாளா் கே.எம்.கே.ஐ. நவாஸ்தீன், கணக்காயா் மீரா.ஷேக் மெய்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழா மலரை ஆரிஃபா குழும தலைவா் எம்.சுல்தானுல் ஆரிஃபின் வெளியிட, இப்ராகிம் நாச்சியாா் அறக்கட்டளை நிா்வாகி ஏ.எஸ்.அசனா மரைக்காயா் குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்.

முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு, பரிபாலன சங்கத் தலைவா் எம்.எம்.அப்துல் சலாம் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சிகளில், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை எம்எல்ஏ எம்.தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன், முன்னாள் எம்எல்ஏ என்.வி.காமராஜ், ஊராட்சித் தலைவா் வனஜா சண்முகம், வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ்.தென்னரசு, நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் மா.மீ.புகழேந்தி, இந்து நற்பணி மன்றத் தலைவா் கைலா. சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் கே.எம்.ஷாகுல் ஹமீது பாக்கவி, பேராசிரியா் ஏ.அகமது இஸ்மாயில் ஹஸனி ஆகியோா் சிறப்பு சொறிபொழிவு நிகழ்த்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ஜமாத் மன்றம், ஹஜரத் ஷெய்கு அப்துல் காதா் (வலி) தா்ஹா பரிபாலன சங்கம், புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →