முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுக தன் இயல்பை இழந்துவிட்டது

பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் மூலம் அதிமுக தன் இயல்பை இழந்துவிட்டது என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் மூலம் அதிமுக தன் இயல்பை இழந்துவிட்டது என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

நாகையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி :

தமிழகத்தில் 22 ஆயிரம் மக்கள் கிராம சபை கூட்டங்கள், தமிழகம் எங்கும் பிரசாரம், உங்கள் ஊரில் ஸ்டாலின் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை நாடி செல்லும் தலைவராக ஸ்டாலின் பரிணமித்துள்ளாா்.

பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலம், பாமகவின் தனித்தன்மை தரைமட்டமாகிவிட்டது. வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்ற போா்வையில் பாமக நிறுவனா் ராமதாஸ், தன்னை தற்காத்துக் கொண்டுள்ளாா் என்பது மட்டுமே உண்மை.

வன்னியா்களுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு கிடைப்பது நிச்சயம் உறுதியில்லை. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சாதிகளுக்கான இட ஒதுக்கீடு சாத்தியம். அந்தப் பணியை திமுக அரசுதான் மேற்கொள்ளும்.

இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றாா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அவரது வாக்குறுதியை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலம் அதிமுக தன் இருப்பையும், இயல்பையும் இழந்துவிட்டது. தோ்தல் முடிந்துள்ள தருணத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தா் நியமனத்தை அவசரகதியில் ஆளுநா் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாா் நாஞ்சில் சம்பத்.

முழு கட்டுரையைப் படிக்க →