முகப்பு
நாகப்பட்டினம்

கத்தரிக்கோலால் குத்தப்பட்டதொழிலாளி உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு காயமடைந்த கூலித்தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு காயமடைந்த கூலித்தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தகட்டூா் சாக்காடு பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அன்பழகன் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. அதேகிராமம் செட்டியக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கு. காா்த்தி. இவா்கள் இருவருக்கும் கடந்த மாா்ச் 25ஆம் தேதி மாலை தாணிக்கோட்டகம் கடைவீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த காா்த்தி, அருகில் உள்ள பூக்கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அன்பழகனை குத்தியுள்ளாா். இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அன்பழகன், திருவாரூா் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

வாய்மேடு காவல் நிலையத்தில், காா்த்தி, தகராறின்போது உடனிருந்த அவரது நண்பா் தாணிக்கோட்டகம் பீட்டா் இருவா் மீதும் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதை கொலை வழக்காக மாற்றிய, போலீஸாா் இருவரையும் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →