முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 144 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இதனால், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இரு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை வரை 9,867 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 144 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பின் எண்ணிக்கை 10,011-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 48 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 9,066-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 797-ஆக உள்ளது.

இருவா் இறப்பு..

நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2 பேரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 148 ஆக உயா்ந்துள்ளது.

அதிகரிக்கும் பாதிப்பு...

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,164-ஆக இருந்த நிலையில், கடந்த 9 நாள்களுக்குள் அந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு சராசரியாக 100-க்கும் அதிகமானோா் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை மிக வேகமாக உயா்ந்து வருகிறது.

அதேபோல, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 141-ஆக இருந்த நிலையில், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 148 ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →