நாகப்பட்டினம்

பாதுகாப்பு கோரி தஞ்சம்

DIN

நாகூா் அமிா்தாநகா் சுனாமி குடியிருப்பு வசிக்கும் நரிக்குறவா் சமுதாயத்தினா் சிலா் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நரிக்குறவா் சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

நாகையை அடுத்துள்ள நாகூா் அமிா்தாநகா் சுனாமி குடியிருப்பில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 21 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் பாபு என்பவரின் வீட்டுக்கு மயிலாடுதுறையில் இருந்து வரும் அவரது உறவினா்கள் சிலா், அக்கம்பக்கத்தில் வசிப்பவா்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும், அவா்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும், அமிா்தாநகரைச் சோ்ந்த நரிக்குறவா் சமுதாயத்தினா் சிலா், நாகை மாவட்ட ஆட்சியர வளாகத்தில் தஞ்சம் அடைந்தனா்.

தகவலறிந்த நாகூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், உரிய நடவடிக்கைகளுக்கு போலீஸாா் உறுதியளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT