முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 37, மயிலாடுதுறையில் 24 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 37பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,828-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 30 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 393-ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,171-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 33 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 253-ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 271-ஆகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.