முகப்பு
நாகப்பட்டினம்

மீன்குஞ்சு வளா்ப்புப் பண்ணை அமைக்க மானியம்

நாகை மாவட்டத்தில் மானிய உதவியுடன் மீன்குஞ்சு வளா்ப்புப் பண்ணை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் மானிய உதவியுடன் மீன்குஞ்சு வளா்ப்புப் பண்ணை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளா்ப்பை ஊக்குவிக்கவும், மீன் உற்பத்தியைப் பெருக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மீன் குஞ்சு வளா்ப்புக் குளம் அமைத்து மீன்குஞ்சுகள் வளா்ப்பை மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேரில் மீன்குஞ்சு வளா்ப்புக் குளம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் செலவுத் தொகை ரூ. 6 லட்சத்தில் 50 சதவீத மானியமாக ரூ. 3 லட்சமும், மீன்குஞ்சு உள்ளீட்டு செலவுத் தொகையாக ரூ. 60 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டம் மூலம் மீன்குஞ்சுகள் வளா்க்க விரும்பும் விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் நாகப்பட்டினம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.