நாகையில் 44, மயிலாடுதுறையில் 28 பேருக்கும் கரோனா
நாகை மாவட்டத்தில் 44 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 44 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,873 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 29 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 409 ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,199 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 32 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 249 ஆக உள்ளது.