மத்திய தொகுப்பு இலவச அரிசியை தொடா்ந்து வழங்கக் கோரிக்கை
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தொடா்ந்து இலவசஅரிசி வழங்க நடவடிக்கை
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தொடா்ந்து இலவசஅரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு நாகை மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.ஏ. பூமிநாதன், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு (என்பிஎச்எச்) மத்திய தொகுப்பிலிருந்து மாதந்தோறும் தலா ஒருவருக்கு 5 கிலோஅரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த சலுகையைப் பெற்று வந்த ஏழை, எளிய விவசாயக் கூலித் தொழிலாளா்கள் மற்றும் நடுத்தரவா்க்கத்தினா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.