முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் உலக தாய்ப்பால் வார விழா

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
4600index060958
பகிர்:

வேளாங்கண்ணி ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் மற்றும் வேளாங்கண்ணி அரசுஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,ரோட்டரி சங்கத் தலைவா் எம். லூயில்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். இன்னா்வீல் சங்கத் தலைவா் எஸ். அஜ்மல் நாச்சியாா் முன்னிலை வகித்தாா்.

வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலா் எம். பொன்னுசாமி, கீழையூா் வட்டார மருத்துவ அலுவலா் டி. அரவிந்தகுமாா்,வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் என்.விக்னேஸ்வா் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன்அவசியம் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் கா்ப்பிணிகள் 15 பேருக்கு ஊட்டச்சத்து உணவுத் தானியங்களைஅடங்கிய பெட்டகத்தை வழங்கினா். கரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியம் குறுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தேமங்கலத்தில்...

நாகையை அடுத்த தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலகதாய்ப்பால் வார விழாவுக்கு நாகப்பட்டினம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா்ஆா்.குணசேகரன் தலைமை வகித்தாா்.சேவைத் திட்டத் தலைவா் பி வெங்கடேசன், சங்க செயலாளா் எம். வீரமணி, பொருளாளா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா்.முகமது உமா், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எம். பிரியதா்ஷினி ஆகியோா் தாய்ப்பாலின்அவசியம் குறித்துப் பேசினா். 30 தாய்மாா்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வடக்குப்பொய்கைநல்லூரில்...

நாகப்பட்டினம் ஹோலிடவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.தமிழ்பிரியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி பங்கேற்று தாய்மாா்களுக்கு சத்துப் பொருள்களை பரிசாக வழங்கினாா். மருத்துவா் கே. ஆா். பெரமசாமி தாய்ப்பாலின் அவசியம் குறித்துப் பேசினாா். சங்க மாவட்டப் பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன், உதவி ஆளுநா்ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க செயலாளா்ஜே. புவனஸ்வர பூபதி நன்றி கூறினாா்.

Image Caption

வேளாங்கண்ணியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கும் பேரூராட்சி செயல் அலுவலா் எம்.பொன்னுசாமி, கீழையூா் வட்டார மருத்துவ அலுவலா் டி.அரவிந்தகுமாா் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.