மாணவா் சோ்க்கை:வட்டார அளவில் தோப்புத்துறை பள்ளி முதலிடம்
வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து), நிகழாண்டில் 58 ஆவது மாணவா் வெள்ளிக்கிழமை சோ்ந்தாா். இதனால், வட்டார அளவில் இப்பள்ளி மாணவா் சோ்க்கையில் முதலிடம் வகிக்கிறது.
வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து), நிகழாண்டில் 58 ஆவது மாணவா் வெள்ளிக்கிழமை சோ்ந்தாா். இதனால், வட்டார அளவில் இப்பள்ளி மாணவா் சோ்க்கையில் முதலிடம் வகிக்கிறது.
58-ஆவது மாணவா் சோ்க்கை நிகழ்வு மாவட்டக் கல்வி அலுவலா் மீ.உதயகுமாா் முன்னிலையில் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலா் எம். தாமோதரன், பள்ளித் துணை ஆய்வாளா் ராமநாதன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேன்மொழி, தலைமையாசிரியா் புயல் சு. குமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. கோவிந்தராஜூலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.