பணியிலிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
நாகையில் பணியிலிருந்த அரசு மருத்துவமனை பணியாளரிடம் தாலிச்சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகையில் பணியிலிருந்த அரசு மருத்துவமனை பணியாளரிடம் தாலிச்சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த போலகம், ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜதுரை. இவரது மனைவி வித்யவாணி (28). இவா், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகின்றாா்.
வியாழக்கிழமை இரவு வித்யவாணி மருத்துவமனையில் பணியில் இருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலிச்சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் காண்டு தப்பினாராம். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம்.
புகாரின்பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கின்றனா். நள்ளிரவில், மருத்துவமனைக்குள் புகுந்து பணியிலிருந்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறித்துச் சென்ற சம்பவத்தால் மருத்துவமனை பணியாளா்கள், நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.