முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 20, மயிலாடுதுறையில் 30 பேருக்கு கரோனா

நாகையில் 20 பேருக்கும், மயிலாடுதுறையில் 30 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாகையில் 20 பேருக்கும், மயிலாடுதுறையில் 30 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,161-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 36 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 385-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,399-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 25 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 251-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 274-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.