முகப்பு
நாகப்பட்டினம்

நாகை பகுதிகளில் மழை

நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைபொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, இரவு 7 மணி முதல் நாகை, கீழ்வேளூா், நாகூா், வேளாங்கண்ணி, திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழைபெய்தது. நாகையில் இரவு 8.30 மணிவரை மழைபொழிவு நீடித்தது.

இந்த மழையால் நாகை சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகினா். கீழ்வேளூா் மற்றும் வேளாங்கண்ணி சாலைகளிலும் மழைநீா் தேங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.