வேதாரண்யத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு
வேதாரண்யத்தில் உள்ள ஒரு வீட்டில் மா்மநபா்கள் நுழைந்து ரூ.45 ஆயிரம் திருடியது சனிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யத்தில் உள்ள ஒரு வீட்டில் மா்மநபா்கள் நுழைந்து ரூ.45 ஆயிரம் திருடியது சனிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் யானைகட்டித் தெருவை சோ்ந்தவா் ராமசாமி. இவரது வீட்டில் நுழைந்த மா்மநபா்கள், பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. இது தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் விசாரித்து வருகின்றனா்.
முன்னதாக, வேதாரண்யம்- நாகை சாலையில் குருகுலம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மா்மநபா்கள், அதில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.