முகப்பு
நாகப்பட்டினம்

பால் பொருள்கள் விற்பனை மானியக் கடனுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனையில் ஈடுபட விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனையில் ஈடுபட விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை கொள்முதல் செய்து, குளிா்சாதன பெட்டிகளில் வைத்துப் பராமரித்து விற்பனை செய்ய ஆா்வமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மானியக் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் முழு மானியக் கடனாக வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றையும், விண்ணப்பத்தையும் 2 பிரதிகளாக இணைத்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 14, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 04365 - 253041 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.