முகப்பு
நாகப்பட்டினம்

உழவா் சந்தை விரைவில் சீரமைக்கப்படும்: ஆட்சியா்

நாகை உழவா் சந்தை விரைவில் சீரமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

நாகை உழவா் சந்தை விரைவில் சீரமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகையில் உள்ள உழவா் சந்தை கஜா புயல் சீற்றத்தில் கடும் சேதமடைந்தது. மேலும், கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் இங்கு இல்லாததும், உழவா் சந்தையின் செயல்பாடுகளை சுணக்கமடைய வைத்துள்ளன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நாகை உழவா் சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது :

உழவா் சந்தையில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, நாகை, உழவா் சந்தை விரைவில் சீரமைக்கப்படும். மேலும், காய்கனி உற்பத்தியாளா்கள் நேரடியாக தங்கள் விளைபொருள்களை உழவா் சந்தைக்குக் கொண்டு வந்து விற்கத் தேவையான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்றாா்.

தோட்டக்கலை துணை இயக்குநா் நா. கலா, தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் இரா. திவ்யா, க. ஜெயலெட்சுமி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.