நாகப்பட்டினம்

ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

DIN

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழையூர் அருகேயுள்ள பிரதாபராமபுரம் ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரத்தில்   பழமை வாய்ந்த  ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன்  ஆலயம் அமைந்துள்ளது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கி  வெள்ளிக்கிழமை காலை பூர்ணாகுதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர், ஸ்ரீ அம்மன், பச்சையம்மன், வீரன் பொம்மி, வெள்ளையம்மாள்  உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான  பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT