நாகை கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சோதனை
நாகையில் நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின் போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் எடையிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகையில் நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின் போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் எடையிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில், நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையில், சுகாதார ஆய்வாளா் அறிவழகன் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் அடங்கிய குழுவினா் நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், பல கடைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப்பைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, சுமாா் 2 டன் எடையிலான நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொடா்புடைய கடைகளுக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.