முகப்பு
நாகப்பட்டினம்

அரசுப்பேருந்தை இயக்கக்கோரி சிபிஎம் போராட்டம்

பெரம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கிராமங்களில் மீண்டும் அரசு பேருந்தை இயக்கக்கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப்பெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

பெரம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கிராமங்களில் மீண்டும் அரசு பேருந்தை இயக்கக்கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மயிலாடுதுறையிலிருந்துபெருஞ்சேரி, கிளியனூா், கடக்கம், பெரம்பூா், சங்கரன்பந்தல்,சேந்தமங்கலம் வழியாக திருவிடைக்கழி வரை இயங்கி வந்த, தடம் எண் 31 அரசு பேருந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாய் இல்லை என்ற காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பேருந்தில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி, மாணவா்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா். இந்த நிலையில் அரசு பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, பெரம்பூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஒன்றியக்குழு உறுப்பினா் கே விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய செயலாளா் சி. விஜயகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டம் நடைப்பெற்ற இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன், மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் ராமமூா்த்தி, பெரம்பூா் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி ஜன. 1-ஆம் தேதி பேருந்தை இயக்குவதாக உறுதி அளித்தனா். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.